தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இந்தியாவில் புதிதாக 11,649 பேருக்கு கரோனா; 90 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 4:49 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 
இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,09,16,589-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 9,489 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,06,21,220-ஆக அதிகரித்தது. 
கரோனா தொற்றுக்கு மேலும் 90 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,55,732-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,39,637 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 20.67 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 4,86,122 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேசமயம் நாட்டில் இதுவரை 82,85,295 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.