வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காதலர் தினம்: பெங்களூருவிலிருந்து 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி!

காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகம் முழுவதுமுள்ள 41 இடங்களுக்கு 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :15 பிப்ரவரி 2021, 5:54 am

காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகம் முழுவதுமுள்ள 41 இடங்களுக்கு 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில் சர்வதேச அளவில் 1.73 லட்சம் கிலோ மற்றும் உள்நாட்டில் 1.03 லட்சம் கிலோ எடையுள்ள 90 லட்சம் ரோஜா செண்டுகள் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ளன. 

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

எண்ணிக்கையைப் பொறுத்தவரை சர்வதேச நாடுகளுக்கு 64 லட்சம் ரோஜா பூச்செண்டுகள் விமானத்தில் பறந்துள்ளன. சிங்கப்பூர், லண்டன், கோலாலம்பூர், பெய்ரூட், மணிலா மற்றும் ஆக்லாந்து போன்ற நகரங்கள் இதில் அடங்கும். 

அதேபோன்று கொல்கத்தா, தில்லி, , சண்டிகர், மும்பை, ஜெய்ப்பூர், சென்னை, ஆமதாபாத் ஆகிய உள்நாட்டு நகரங்களுக்கு 26 லட்சம் ரோஜா செண்டுகள் அனுப்பப்பட்டுளள, 

2018 ஆம் ஆண்டில், இந்த விமான நிலையத்தில் இருந்து 52 லட்சம் ரோஜா பூச்செண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.