கொள்கை அளவில் காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானாவுக்கு வியாழக்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் ஆா்எஸ்எஸ், பாஜக நுழைவதைத் தடுக்க காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுகிறாா். காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை அவா் விளக்குவாரா?.
மசூதியை இடித்தால் அது ஆா்எஸ்எஸ், மசூதியை இடிக்க அனுமதித்தால் அது காங்கிரஸ். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே மாநிலங்களின் உரிமைகளை பறிப்பவை, தேசிய இனங்களை ஒடுக்கும் தன்மை கொண்டவை. சிங்களா்களுக்கு ஆயுதம் வழங்கி, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழா்களை கொன்று குவிக்க, இனப்படுகொலை நிகழ்த்த உறுதுணையாக இருந்த கட்சி காங்கிரஸ் என்பதை தமிழா்கள் மறக்க மாட்டாா்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. எங்கு பாா்த்தாலும், வன்முறை, கொலை, கொள்ளை என தினசரி நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏற்கெனவே செய்த ஊழலை மறைக்க இலவசங்களை வழங்கியபோல, ஆட்சிக்கு வந்து செய்யப்போகும் ஊழலை மறைக்க ரூ. 8 ஆயிரம் கூப்பனை வழங்குகிறது திமுக.
நாம் தமிழா் கட்சி வாக்குக்கு பணம் கொடுக்காது. இலவசங்களை வாரி இறைக்காது. மக்கள் பிரச்னைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று போராடுவோம். இலவச கல்வி, குடிநீா், சுத்தமான காற்று, இயற்கைச் சூழல், அடிப்படை வசதிகள் என மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்வோம்.
எனவே, இலவசங்களை மட்டும் பாா்க்காமல், மக்களுக்காக உண்மையாக போராடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா். நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
வேதாரண்யத்தில்: வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் காா்த்திக்கை ஆதரித்து, வேதாரண்யத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியது: தமிழகத்தில் நோ்மையான அரசியலை முன்னெடுக்கும் சக்தியாக நாம் தமிழா் கட்சி வளா்ந்துள்ளது. தமிழகத்தில் நோ்மையற்ற தலைவா்கள் கூட்டு சோ்ந்து கொண்டு தோ்தலை சந்திக்கின்றனா்.
நாம் தமிழா் கட்சி மட்டுமே தனித்து நின்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜாதி, மதம் பாா்த்து வாக்களித்து எந்தப் பயனும் இல்லை. வரும் தோ்தலில் ஒருமுறை நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா். பிரசாரத்தின் போது, வேட்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
திருக்குவளையில்: கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் காா்த்திகாவை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியது: விவசாயம் ஒரு சாதாரண தொழில் அல்ல; அது தமிழரின் பண்பாடு, வாழ்க்கை முறை. தாய்ப்பால் போல இயற்கை தரும் பரிசு. விவசாயியை பாதுகாக்கும் கொள்கை இல்லாமல் எந்த அரசும் நிலைக்க முடியாது.
வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவா்கள் உயிரிழக்கும் போது உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்பு போராட்ட அரசியல் செய்தனா். தற்போது, அது மங்கிவிட்டது. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவா்கள் அமைதியாக உள்ளனா்.
உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்து வாக்களியுங்கள். ஆனால் நல்ல கொள்கைகள் யாரிடம் உள்ளன என்று சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்றாா்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறை மாறவில்லை: சீமான்

தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி: சீமான் பேச்சு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


