அதிகரிக்கும் கரோனா: கேரள எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடகம்

கரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் சமீபமாக அதிகரித்து வருவதையடுத்து, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது கர்நாடக அரசு. 
அதிகரிக்கும் கரோனா: கேரள எல்லைகள் மீண்டும் மூடல் 
அதிகரிக்கும் கரோனா: கேரள எல்லைகள் மீண்டும் மூடல் 

கரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் சமீபமாக அதிகரித்து வருவதையடுத்து, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது கர்நாடக அரசு. 

தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளை கர்நாடக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, எல்லைப்பகுதியில் இன்று காலையிலிருந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றபடியே உள்ளனர். 

திங்கள்கிழமை முதல் நான்கு எல்லைகளுக்கும் சீல் வைத்துள்ளதாக தட்சிண கன்னட அதிகாரிகள் தெரிவித்தன.

இதுதொடர்பாக கர்நாடக அதிகாரிகள் கூறுகையில், 

எல்லையில் நுழைய விரும்புவோர் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கரோனா எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது அவசியம். 

மேலும், நான்கு எல்லைகளிலும் சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com