குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதான நடிகர் தீப் சித்துவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் கடந்த மாதம் 26}ஆம் தேதி விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். மதரீதியான கொடியை ஏற்றினர்.
செங்கோட்டை வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகர் தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் சிறப்புக் குழுவினர் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்.9}ஆம் தேதி வரை 7 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டப்பட்டது. பின்னர் மேலும், 7 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது போலீஸ் காவல் முடிந்து திகார் சிறையில் இருந்தவாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் சமர்ஜீத் கௌர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

