கேரள தங்கக் கடத்தல்: 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

​கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ் (கோப்புப்படம்)
ஸ்வப்னா சுரேஷ் (கோப்புப்படம்)


கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஸ்வப்னா சுரேஷ், சாரித் பிஎஸ் மற்றும் கேடி ரமீஸ் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 35 பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com