டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ம.பி., ஆந்திரத்துக்கு மத்திய அரசு ரூ.1,004 கோடி கூடுதல் நிதி

மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்திய பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி

News image
Updated On :6 ஜனவரி 2021, 11:09 pm

தினமணி


புது தில்லி: மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்திய பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பைச் சந்தித்த மாநிலங்களுக்கு தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின்படி சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தாண்டு அறிவித்தார். இந்தத் திட்டத்தின் படி ரூ.14,694 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டதோடு கூடுதலாக மூலதனச் செலவுகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்தது. இதைப் பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதில் தற்போது மூன்று மக்கள் மத்திய அரசின் சீர்திருத்தங்களை (ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சீர்திருத்தங்கள்) மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம் அரசுகள் நிறைவேற்றியுள்ளன. 
இதற்காக "மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி' திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.344 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.660 கோடி என மொத்தம் ரூ.1,004 கோடி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத் துறை புதன்கிழமை முடிவு செய்து அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.