புவனேஸ்வர்: ஒடிசா இரும்புத் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இயங்கி வரும் ரெளர்கீலா இரும்பு தொழிற்சாலையில் நிலக்கரி ரசாயனப் பிரிவில் இன்று 10 பேர் பணியாற்றி வந்தனர்.
இதனிடையே நிலக்கரி ரசாயனப் பிரிவில் ஏற்பட்ட கசிவில் முதற்கட்டமாக 4 பேருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அவர்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 4 பேர் உயிரிழந்தனர். மேலும் உடன் பணியாற்றிய இருவருக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கார்பன் மோனாக்ஸைடு வாயுக் கசிவால் நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு தொழிற்சாலை வழக்கம்போன்று இயங்கி வருகிறது.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தொழிற்சாலை சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


