மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா முதல்வரின் உயிருக்கு ஆபத்து: மர்மக் கடிதத்தால் பரபரப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஒரு கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Updated On :8 ஜனவரி 2021, 8:20 am

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வந்துள்ள மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு வந்துள்ள விலாசமில்லா அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தக் கொலையாளிகள் எந்த நேரத்திலும் உங்களைத் தாக்கலாம். அவர்கள் முதல்வரை பின்தொடர்ந்து வருகிறார்கள். தயவுசெய்து இதுகுறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஏ.கே .47 மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறி சில கார்களின் எண்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்தக்கடிதம் டிஜிபி, புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் புவனேஸ்வர்-கட்டாக் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.