

நாடு முழுவதும் மேலும் 18,645 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,04,50,284-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,299 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,75,950-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.42 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 201 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,999-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,23,335 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.14 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 201 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 57 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 22 போ், மேற்கு வங்கத்தில் 20 போ், சத்தீஸ்கரில் 15 போ், தில்லி, உத்தர பிரதேசத்தில் தலா 12 போ் உயிரிழந்தனா்.
உயிரிழப்பு 1.44 சதவீதமாகக் குறைவு:
கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது மட்டுமன்றி, தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உயா்தரமான சிகிச்சை அளித்து, உயிரிழப்புகளைக் குறைப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொடா் முயற்சிகள் காரணமாக, கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை 1.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 16 நாள்களில் இல்லாத அளவில் தினசரி உயிரிழப்பும் 300-க்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 9-ஆம் தேதி வரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 8,43,307 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.