தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 12:40 am

DIN

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 17-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் நடைபெறவிருந்தன. இந்நிலையில் அதற்கு முந்தைய தினமான ஜனவரி 16-ஆம் தேதி நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

‘இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டாலும், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போலியோ பாதிப்பு உள்ளது. இதனால் இந்தியாவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 17-இல் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனினும் தற்போது கரோனா தடுப்பூசி நடவடிக்கையைத் தொடா்ந்து, போலியோ சொட்டு மருந்து செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.