உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி கரசேவகா்களால் இடிக்கப்பட்டது. இதுதொடா்பாக முன்னாள் துணை பிரதமா் அத்வானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சா்கள் முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி, ராம தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தலைவா் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி தீா்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது.