பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவை திரட்டும் ராகுல்

மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தில் பொதுமக்களும் ஆதரவளித்து ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image

விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவை திரட்டும் ராகுல்

Updated On :15 ஜனவரி 2021, 7:27 am


புது தில்லி: மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தில் பொதுமக்களும் ஆதரவளித்து ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதற்கும் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் விவசாயிகளின் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசுக்கு எதிராக, தங்களது உரிமைகளை நிலைநாட்ட விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள், அதே வேளையில் மறுபக்கம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 

விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தில் மக்களும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.