மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

'அனைவருக்கும் வீடு' திட்டம்: உ.பி.யில் 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 2,691 கோடி விடுவிப்பு

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 2,691 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

News image
காணொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி
Updated On :20 ஜனவரி 2021, 11:57 am

DIN

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 2,691 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

'2022க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி' என்ற இலக்கிற்கு ஏற்ப, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புற, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வீடு இல்லாதோருக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் 20, 2016 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 1.26 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Story image

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 6.1 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 2,691 கோடி ரூபாய் நிதியை புதன்கிழமை பிரதமர் மோடி விடுவித்தார். இதுதொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக கலந்துகொண்டார். மேலும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Story image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5.30 லட்சம் பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 80,000 பயனாளிகளுக்கும் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில், கிராமப்புறங்களில்  ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.