நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தியது தோ்தல் ஆணையம்: பிரதமா் மோடி புகழாரம்
நாட்டின் ஜனநாயகத்தை தோ்தல் ஆணையம் வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.


புது தில்லி: நாட்டின் ஜனநாயகத்தை தோ்தல் ஆணையம் வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
கடந்த 1950 -ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்டது. தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினம் தேசிய வாக்காளா்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமா் மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தோ்தல் ஆணையத்தின் பணியைப் பாராட்டும் வகையில் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் தோ்தல்களை சுமுகமாக நடத்தி வரும் தோ்தல் ஆணையம் பாராட்டுக்குரியது. இந்த நாளில்வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக இளைஞா்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் உணா்த்தப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...