ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

"தாண்டவ்' இணையத் தொடர் விவகாரம்: உ.பி., கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

"தாண்டவ்' இணையத் தொடருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்ற

News image
Updated On :28 ஜனவரி 2021, 4:17 am IST

புது தில்லி: "தாண்டவ்' இணையத் தொடருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
அமேஸான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் "தாண்டவ்' என்ற ஹிந்தி இணையத் தொடரில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, அமேஸான் நிர்வாகி அபர்ணா புரோஹித், இணையத் தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, கதாசிரியர் கெüரவ் சோலங்கி ஆகியோர் மீது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், தில்லி, பிகார் மாநில காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அமேஸான் நிர்வாகி, தொடரின் இயக்குநர் உள்ளிட்டோர் அந்த மனுக்களில் கோரியிருந்தனர். அந்த மனுக்களை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரித்தது. 
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வாதிட்டனர். மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் "தாண்டவ்' இணையத் தொடர் 
இருப்பதாகத் தெரிவித்தனர். 
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு, மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், தில்லி, பிகார் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் கைது செய்யப்படுவதற்கு எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.