சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப். 2ல் வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2021, 10:10 am

DIN

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. 

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் கூறினார். 

நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி கூட்டத்தில் அமைச்சர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.