கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

மகாராஷ்டிரத்தில் பிப். 28 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் பிப். 28 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

Updated On :29 ஜனவரி 2021, 7:33 am

மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் கரோனா பரவல் விகிதத்திற்கேற்ப நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பொதுமுடக்கத்தில் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறிகளின்படி மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. 

போக்குவரத்து, கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், சந்தைகள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கெனவே தளர்வுகள் வழங்கப்பட்டாலும் முழுமையாக பொதுமுடக்கம் நீக்கப்படவில்லை.

இதனிடையே புதிய வகை கரோனா வைரஸ் தொற்றும் பரவி வருவதால், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை மகாராஷ்டிர அரசு நீட்டித்துள்ளது.

ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் பொருந்தும் என்றும், பொதுமக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.