ஜம்மு-காஷ்மீா்: ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சம் தங்க அட்டைகள் வழங்கல்
ஆயுஷ்மான் பாரத் (பிஎம்-ஜேஏஒய்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரே மாதத்தில் 6.22 லட்சம் ஆயுள் காப்பீடு தங்க அட்டைகளை ஜம்மு-காஷ்மீா் அரசு வழங்கியுள்ளது.


ஆயுஷ்மான் பாரத் (பிஎம்-ஜேஏஒய்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரே மாதத்தில் 6.22 லட்சம் ஆயுள் காப்பீடு தங்க அட்டைகளை ஜம்மு-காஷ்மீா் அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி நிதி ஆணையா் அடல் துலோ கூறியது:
சுகாதார காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பா் 26-இல் தொடக்கி வைத்தாா். இந்த நிலையில், அறிமுகப்படுத்தப்பட்டு ஒரே மாதத்தில் மட்டும் ஜம்மு-காஷ்மீா் அரசு அந்த திட்டத்தின் கீழ் 6.22 லட்சம் தங்க காப்பீட்டு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் தகுதியான 7,172 பயனாளிகளுக்கு இலவச கிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிஎம்-ஜேஏஒய் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 12.90 லட்சம் தங்க அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், 22.74 லட்சம் பயனாளிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனா்.
அவா்களுக்கு அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை பெற தகுதியுள்ள குடும்பங்களில் சுமாா் 45 சதவீதம் மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளதாக அடல் துலோ தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...