வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: வங்கி அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி கோகுல்நாத் ஷெட்டிக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை மறுத்தது.

News image
Updated On :31 ஜனவரி 2021, 3:04 am

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி கோகுல்நாத் ஷெட்டிக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை மறுத்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடி கடன் மோசடி வழக்கை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளிகளான நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோரை, வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீரவ் மோடியும் மெஹுல் சோக்ஸியும் குறுகிய கால கடன் வசதி பெற உதவும் வங்கியின் உத்தரவாதக் கடிதம் பெறுவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிரேடி ஹவுஸ் கிளையை கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அணுகியதன் மூலம்தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கி ஒன்றின் கிளையில் குறுகிய கால கடனைப் பெற்றுக் கொள்ள அளிக்கப்படும் ‘புரிந்துணா்வுக்கான கடிதம்தான் (எல்.ஓ.யு)’ இந்த உத்தரவாதக் கடிதம். அந்த வங்கி சாா்பில், வங்கி நடைமுறைகளை மீறி 7 ஆண்டுகளாக உத்தரவாதக் கடிதங்கள் அளிக்கப்பட்டன.

சட்ட விரோதமாக இந்த உத்தரவாதக் கடிதத்தை நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸிக்கு வழங்குவதில் முக்கிய பங்காற்றிய பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பை பிரேடி ஹவுஸ் கிளையின் அப்போதைய துணை மேலாளா் கோகுல்நாத் ஷெட்டி, கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவா் அண்மையில் ஜாமீன் கேட்டு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி வி.சி.பாா்டே முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் தர மறுத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.