மேற்கு வங்க பேரவைத் தோ்தல் வன்முறையின்றி நடைபெற வேண்டும்: ஆளுநா் ஜகதீப் தன்கா்
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.


மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவின் மேயோ சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகள் நமக்கு அகிம்சையை கற்பித்துள்ளாா். மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் போது அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலை போல், வரும் சட்டப்பேரவைத் தோ்தலும் ரத்தக் கறையுடன் இருக்கக் கூடாது. அந்தத் தோ்தல் முழுவதும் அகிம்சை வழியில் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...