அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :3 ஜூலை 2021, 5:37 am

DIN

நாடு முழுவதும் 34.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,99,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 34,46,11,291 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 28,27,43,449 பேர் முதல் தவணையும் 6,18,67,842 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், 18 முதல் 44 வயதுடையோருக்கு 9,88,72,041 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10,73,90,412 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9,36,89,174 தடுப்பூசிகள், முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4,46,59,664 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.