அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :3 ஜூலை 2021, 3:56 pm

DIN

நாட்டில் இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 35 கோடிக்கும் அதிகமான (35,05,42,004) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 57.36 லட்சம் (57,36,924) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் 28,33,691 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 3,29,889 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 99,434,862 பேர் முதல் டோஸையும், 2,712,794 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவனருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியாணா, ஜார்கண்ட், கேரளம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 5816249 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 136622 நபர்கள் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 190648 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 349 பேர் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.