தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :4 ஜூலை 2021, 3:58 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,336 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,23,225 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று 123 பேர் பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,23,030ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,378 மீண்டனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58,48,693ஆக உயர்ந்துள்ளது. 6,38,004 பேர் வீடுகளிலும், 4,198 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிப்பகுதியான தாராவில் இன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.