அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் 35.28 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 35.28 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
Updated On :5 ஜூலை 2021, 8:19 am

DIN

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14,81,583 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 35,28,92,046 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 28,83,23,682 பேர் முதல் தவணையும் 6,45,68,364 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், இதுவரை 18 முதல் 44 வயதுடையோருக்கு முதல் தவணையாக 10,07,24,211 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 27,77,265 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 9,07,90,116 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 1,89,54,073 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 6,89,93,767 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 2,58,54,470 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.