ராஜஸ்தானில் லாரி - கார் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் பலி; இருவர் படுகாயம்
ராஜஸ்தானில் லாரி மற்றும் கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.


ராஜஸ்தானில் லாரி மற்றும் கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் டங்கியாவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இருவரும் ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் லாரியை ஓட்டி வந்தவர் தப்பித்துச் சென்றதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...