அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அனைத்துக் கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம்: பஞ்சாப் அரசு திட்டம்

பஞ்சாபில் கரோனா தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

News image
Updated On :5 ஜூலை 2021, 11:09 am

DIN

பஞ்சாபில் கரோனா தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணாக்கர்களும் எளிதில் தடுப்பூசி செலுத்தும் பொருட்டும் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பொருட்டும் இந்த சிறப்பு பிரசாரத்தை மாநில அரசு தொடங்கவுள்ளது. 

அரசுக் கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து, தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஜூலை மாதத்திலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் பாதிப்பு உயரும் பகுதிகளில் ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான ஒரு சிறப்பு குழுவை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தலைமை செயலாளர் வினி மகாஜன் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார் முதன்மை சுகாதார செயலாளர் ஹுசன் லால் தெரிவித்துள்ளார். 

அதுபோல சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.