அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாநிலங்களிடம் 2.01 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 2.01 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
மாநிலங்களிடம் 2.01 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு
Updated On :5 ஜூலை 2021, 5:17 am

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.01 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 36,97,70,980 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 34,95,74,408 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 2,01,96,572 தடுப்பூசிகள் உள்ளன. 

மேலும், நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.