ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வீரபத்ர சிங் மறைவு: 3 நாள் துக்கம் அனுசரிக்க ஹிமாசல் அரசு முடிவு

ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மறைந்ததையொட்டி, ஜூலை 8 முதல் 10 வரை 3 நாள்கள் துக்கம் அனுசரிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 3:44 am

DIN


ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மறைந்ததையொட்டி, ஜூலை 8 முதல் 10 வரை 3 நாள்கள் துக்கம் அனுசரிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வீரபத்ர சிங் (87) 9 முறை எம்எல்ஏ.,வாகவும், 5 முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். 6 முறை ஹிமாசல முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 12 மற்றும் ஜூன் 11 என இரண்டு முறை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தபோதிலும், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது.

வீரபத்ர சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூலை 8 முதல் 10 வரை 3 நாள்கள் துக்கம் அனுசரிக்க ஹிமாசல அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.