மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மழையால் நிலச்சரிவு:ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை காரணமாக சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

News image
Updated On :10 ஜூலை 2021, 10:30 pm

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை காரணமாக சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பலத்த மழை பெய்ததால், ராம்பன் மாவட்டத்தில் உள்ள மகா்கோட் பகுதியில், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 270 கிலோ மீட்டா் நீளம் கொண்ட இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனரக வாகனங்களும் இலகு ரக வாகனங்களும் சாலையில் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

மண்சரிவை அகற்றி சாலையை சீரமைக்க இயந்திரங்களின் உதவியுடன் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சாலையை சீரமைக்க 12 மணி நேரத்துக்கு மேலாகும் என்பதால் வாகனங்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதனிடையே, சாலையை சீரமைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சாலை சீரமைக்கப்பட்டது குறித்த தகவல்கள் தெரிந்த பிறகு பொதுமக்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.