ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜூலை 17ல் சபரிமலை நடைதிறப்பு

கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் மாத பூஜைக்காக ஜூலை 17 முதல் 21ஆம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளது.  

News image
Updated On :10 ஜூலை 2021, 3:18 pm

DIN

கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் மாத பூஜைக்காக ஜூலை 17 முதல் 21ஆம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளது. 
இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. 48 மணிநேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும், முழுமையான கரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
முன்னதாக கேரளத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அண்மையில் அனுமதி அளித்ததையொட்டி கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்களும் அண்மையில் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.