ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 16 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்யது. அப்போது ராஜஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 7 சிறுவா்கள் உள்பட 16 போ் பலியாகினா்; 6 சிறாா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "ராஜஸ்தானின் சில பகுதிகளில் மின்னல் காரணமாக பலர் உயிர் இழந்துள்ளனர். மக்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...