முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமது சுட்டுரையில் அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளதாவது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை தொடங்கியது.
இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


