மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரை எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் மேக்கேதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேக்கேதாட்டு அணையை நிச்சயம் கட்டியே தீர்வோம் என்று நேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (ஜூலை 12) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று தில்லி சென்று இது குறித்து அவர்கள் முறையிட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

