தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜூலை 18-ல் அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி ஜூலை 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2021, 5:54 am

DIN

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி ஜூலை 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி அனைத்துக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அதுகுறித்து விவாதிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிகிறது. 

இந்தக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க உள்ளன.

அதே தேதியில் மத்திய அமைச்சரவையின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.