கரோனாவைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் டெங்கு, டைபாய்டு

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், பெங்களூருவில் தற்போது டெங்கு மற்றும் டைஃபாய்டு காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்
கரோனாவைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் டெங்கு, டைபாய்டு
கரோனாவைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் டெங்கு, டைபாய்டு
Published on
Updated on
1 min read


பெங்களூரு: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், பெங்களூருவில் தற்போது டெங்கு மற்றும் டைஃபாய்டு காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு வேளை, டெங்கு மற்றும் டைஃபாய்டு பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், கரோனா மூன்றாம் அலையுடன், இந்த பருவக்கால நோய்களும் இணைந்து மருத்துவத் துறைக்கு பெரும் சுமையை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுகிறது.

திடீரென காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், கடுமையான வெப்பத்துக்கு இடையே பெய்யும் கனமழை, தண்ணீர் தேங்குதல் போன்ற காரணங்களால் 20 - 30 சதவீதம் அளவுக்கு டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது. 5- 10 சதவீதம் அளவுக்கு டைபாய்டு பாதிப்பும் அதிகரித்துள்ளது.

மருத்துவர் எஸ்.என். அரவிந்தா கூறுகையில், தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. காய்ச்சலுடன் வருவோருக்கு கரோனா பரிசோதனை எடுக்கச் சொல்வோம். இனி, பழையபடி காய்ச்சலுக்கான பரிசோதனைகளையும் எடுக்க வேண்டும் என்கிறார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 20- 30 சதவீத காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டைபாய்டு காய்ச்சல் குறைந்திருந்தது. காரணம் கரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருந்தனர். டைபாய்டு காய்ச்சல் சுத்தமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. டெங்கு ஏடிஎஸ் வகை கொசு மூலம் பரவுகிறது.

இந்த நோய்கள் பாதித்தால் மக்களுக்கு கடுமையான காய்ச்சல், உடல் வலி ஏற்படும். மருத்துவத் துறையைப் பொருத்தவரை, இந்த காய்ச்சல்களை விரைவாகக் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com