காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு எப்போது அனுமதி?

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோர பைசர் மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 10:23 am

DIN

தில்லி: இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோர பைசர் மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி பணியை மேலும் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோர பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பைசர் மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல் உள்ளன.

இவ்விவகாரம் குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இரண்டு நிறுவனங்களுடனும் பேசியுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனங்கள் பதில் அளித்துள்ளது.

கோவேக்ஸ் திட்டம் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு ஏழு மில்லயன் தடுப்பூசிகள் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆனால், அதுவும் தாமதமாகியுள்ளது.

மாடர்னாவுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், அமெரிக்காவிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய சில சட்ட விவகாரங்கள் தடையாக உள்ளது. இதுகுறித்தும் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.