உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஹரீஸ் ராவத்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஹரீஸ் ராவத்

‘பஞ்சாப் தேர்தலை அமரீந்தர் தலைமையில் சந்திப்போம்’: காங். பொதுச்செயலாளர்

பஞ்சாப் பேரவைத் தேர்தலை அமரீந்தர் சிங் தலைமையில் சந்திப்போம் என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பஞ்சாப் பொறுப்பாளருமான ஹரீஸ் ராவத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் பேரவைத் தேர்தலை அமரீந்தர் சிங் தலைமையில் சந்திப்போம் என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பஞ்சாப் பொறுப்பாளருமான ஹரீஸ் ராவத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், மாநில முதல்வரான அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், இருவருக்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஹரீஸ் ராவத் கூறியதாவது,

கடந்த நான்கு ஆண்டுகளாக அமரீந்தர் சிங் முதலமைச்சராக உள்ளார். வருகின்ற பேரவைத் தேர்தலையும் அவர் தலைமையிலேயே சந்திக்கவுள்ளோம். 

அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இணைந்து பணியாற்றவுள்ளனர். வியூகங்களும் அவ்வாறே வகுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைவர் பதவிக்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com