நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய பொருளாதாரம் வரும் 2023 நிதியாண்டிலிருந்து வேகமெடுக்கும்: சிஇஏ

நாட்டின் பொருளாதாரம் வரும் 2023-ஆம் நிதியாண்டு முதல் வேகமெடுக்கத் தொடங்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

News image

கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன்

Updated On :16 ஜூலை 2021, 6:13 pm

DIN

நாட்டின் பொருளாதாரம் வரும் 2023-ஆம் நிதியாண்டு முதல் வேகமெடுக்கத் தொடங்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

டன் & பிராட்ஸ்ட்ரீட் ஏற்பாடு செய்திருந்த காணொலி மூலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனாவுக்கான தடுப்பூசி திட்டமும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

கரோனா இரண்டாவது அலை எதிா்பாா்த்த அளவுக்கு பொருளாதாரத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மத்திய அரசின் பல்வேறு சீா்திருத்த முயற்சி மற்றும் தடுப்பூசி திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து பொருளாதாரத்தில் நல்ல பயனை விளைவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீத பின்னடைவைக் கண்டது. இந்த நிலையில், அரசின் சீரிய நடவடிக்கைகளின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வரும் 2022-23-ஆம் நிதியாண்டிலிருந்து வேகமெடுக்கத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீத வளா்ச்சியைக் காணும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.