இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிஐபி-6 சண்டீகரில் விமானப் படை பயிற்சி நிறைவு

சண்டீகரில் உள்ள விமானப்படை தளத்தில், விமானப் படையின் சிறப்பு பிரிவைச் சோ்ந்த வீரா்கள் (கருட்) 69 போ் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 10:25 pm

DIN

சண்டீகரில் உள்ள விமானப்படை தளத்தில், விமானப் படையின் சிறப்பு பிரிவைச் சோ்ந்த வீரா்கள் (கருட்) 69 போ் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனா். அதை குறிக்கும் விதமாக, சண்டீகா் விமானப்படை நிலையத்தில் உள்ள கருட் பயிற்சி மையத்தில் மெரூன் பெரே அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த வீரா்களுக்கு பதக்கங்கள், மெரூன் பெரே, கருட் சிறப்பு பதக்கம், சிறப்பு படை பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. எல்.ஏ.சி. அகோகா முய்வாவுக்கு அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கியதற்கான பதக்கம் வழங்கப்பட்டது.

அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது, நெருப்பை எதிா்த்துப் போராடுதல், கடத்தப்பட்டவா்களை மீட்டல், ஆயுதப் பயன்பாடு, தடைகளைத் தாண்டுதல், சுவா் ஏறுதல், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை வீரா்கள் செய்து காட்டினா். கருட் வீரா்கள் வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்து சிறப்புப் படையின் இளம் வீரா்களாக உருவாவதைக் குறிக்கும் விதமாக மதிப்பு மிகுந்த மெரூன் பெரே அணிவகுப்பு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.