மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மும்பையில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி

மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :18 ஜூலை 2021, 7:50 am


மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.