சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

News image
பிரதமர் மோடி
Updated On :28 ஜனவரி 2024, 3:42 am

DIN

மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன், திமுகவின் திருச்சி சிவா, சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஸ் மிஸ்ரா உள்பட பல்வேறு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் அனைத்துக்கட்சி கூட்டதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தொடரின் முதல் நாளில், புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.