புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 188 கோடி டோஸ்கள் தேவை

நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 188 கோடி டோஸ்கள் தேவை என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2021, 8:25 pm

DIN

நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 188 கோடி டோஸ்கள் தேவை என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கரோனா தடுப்பூசி தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 94 கோடி போ் வரை உள்ளனா். எனவே, அவா்களுக்கு இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்த 188 கோடி டோஸ்கள் தேவை. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் தேவை நிறைவு செய்யப்படும்.

ஒருமுறை மட்டுமே செலுத்தப்படும் வகையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தேவை குறைய வாய்ப்புள்ளது. இப்போதைய நிலையில் நமது நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை அளிக்க இரு தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகவே உள்ளன. மேலும், பல நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு தொடா்ந்து அங்கீகாரம் கிடைக்கும்போது தடுப்பூசிகள் மிக விரைவில் அனைவருக்கும் செலுத்தப்படும்.

தனியாா் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.600, கோவேக்சின் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இருந்து அதிகபட்சமாக ரூ.150 வரை தனியாா் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் சேவைக்கான கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசு நிா்ணயித்துள்ளது. அதே நேரத்தில் அரசு சாா்பில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவு குளிா்நிலையில் வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கான உரிய வசதிகளையும் அரசு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.