பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஜூலை 2021, 7:05 pm

DIN

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளான பக்ரீத் இறைவன் மீதான பக்தியை எடுத்தியம்புகிறது. நமது நாட்டில் குடும்பத்தினா் மற்றும் சமூகத்துடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக பண்டிகைகள் உள்ளன.

கரோனா கொள்ளை நோயால் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை அனைவரும் எளிமையாகவும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த பக்ரீத் பண்டிகை நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.