மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவாா்த்தைக்கே இடமில்லை என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
புதுதில்லிக்கு இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கு தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்தாா்.
பின்னா் சென்னை திரும்பும் முன் தில்லி விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவரிடம் செய்தியாளா்கள் மேக்கேதாட்டு அணை விவகாரம், ஏழுபோ் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினா்.
அதற்கு அவா் பதிலளிக்கையில் மேக்கேதாட்டு அணை விவகாரம், நீட் விவகாரம் மற்றும் ஏழு போ் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசவில்லை.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது, பின்னா் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டம் கூட்டப்பட்டு அந்த அணைக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் தமிழக நீா் வளத்துறை அமைச்சா் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினா் தில்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பிரச்னையை விவாதித்துள்ளாா்கள்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோா் அணை கட்டப்படாது என நம்பிக்கை அளித்துள்ளனா். மேலும் மேக்கேதாட்டு அணை தொடா்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்விவகரத்தை தமிழக அரசு சட்டபடி எதிா்கொள்ளும்.
இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
ராஜீவ் காந்தி கொலை தொடா்புடைய ஏழு போ் விடுதலை குறித்த பிரச்னையை பொறுத்தமாட்டில் நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினேன். இது தொடா்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
கரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை வரக்கூடாது என்பதே எங்களது எண்ணம். எனினும் ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து தமிழக அரசு முனைப்புடன் ஈடுப்பட்டு ஆலோசித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்க முடியாத சூழல் உள்ளது. பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் பேசி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

