ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உத்தரப் பிரதேசம் :  குறையத் தொடங்கியது புதிய கரோனா பாதிப்புகள்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்திருக்கிறது.

News image
உத்தரப் பிரதேசம் :  கட்டுக்குள் வந்த கரோனா
Updated On :21 ஜூலை 2021, 5:58 am

DIN

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கையும் கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்திருக்கிறது.

மாநிலத்தின் நோய்த் தொற்றுக்கு இதுவரை 17,07,953 பேர் பாதிப்படைந்ததாகவும் அவர்களில் 16,84,123 பேர் தொற்றிலிருந்து மீண்டதாகவும்  41 மாவட்டங்களில் புதிதாக எவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை என்றும்  30 மாவட்டங்களில் ஒன்றைப்படையில் தான்  நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

நேற்று ( செவ்வாய் கிழமை)  தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களில்  பிரயாக்ராஜ் ( 11 பேர் ) மற்றும் கவுதம புத்தா நகரில் (8 பேர் ) பகுதிகளில்  தான் அதிகம் எனவும் தற்போது  மாநிலத்தில்  தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின்  எண்ணிக்கை 1,100 ஆக இருப்பதால் கரோனா   கட்டுப்பாட்டில்  வந்திருக்கிறது எனத் தெரிவித்தனர்.

மேலும் 7 மாவட்டங்கள் முற்றிலும் கரோனா இல்லாத மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.