மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 15 லட்சத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருப்பதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் நேரடியாக மக்கள் இருக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், 'ஜூலை 31 க்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முடிக்கபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தடுப்பூசி மையங்களில் முதல் தவணை தடுப்பூசியை அனைவரும் எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். ஒரு லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் முன்வந்தால் எங்கள் இலக்கை நிறைவு செய்வோம். ஜூலை 31க்கும் தடுப்பூசி போடாதவர்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு விரைவாக தடுப்பூசி போட அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். அனுமதி வழங்கப்பட்டால், நாங்கள் 30 நாள்களுக்குள் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்வோம். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். எனினும், மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்க இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஆனால் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


