மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்த ராகுல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிரேக்டரை ஓட்டி வந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

News image

நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்த ராகுல்

Updated On :26 ஜூலை 2021, 12:39 pm IST

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தர் பகுதியில் நாள்தோறும் 200 விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பங்கேற்க டிராக்டரை ஓட்டி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியுடன், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிராக்டரில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பஞ்சப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.