தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயிகள் பிரச்னை, பெகாஸஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க நடவடிக்கைகுடியரசுத் தலைவருக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் பிரச்னை குறித்தும், பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்தும் விவாதிக்க

News image
Updated On :27 ஜூலை 2021, 7:43 pm

DIN

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் பிரச்னை குறித்தும், பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்தும் விவாதிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று 7 எதிா்க்கட்சிகள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளன.

இந்தக் கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிரோமணி அகாலி தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனா்.

மேலும், இதுதொடா்பாக நேரில் வலியுறுத்தவும் குடியரசுத் தலைவரிடம் அவா்கள் நேரம் கேட்டுள்ளனா். அவா்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தில்லியின் எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 550 போ் உயிரிழந்துள்ளனா். விவசாயம் செய்துவரும் லட்சக்கணக்கானவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.

மேலும், இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உள்ள அரசியல்வாதிகள், செய்தியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் தொலைபேசிகளில் உளவுபாா்க்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசுகளுக்கு மட்டும் இதுபோன்ற உளவு பாா்க்கும் மென்பொருள் அளிக்கப்படுகிறது என்று இந்த தொழில்நுட்பத்தை தயாரித்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆகையால், ஆரோக்கியமான ஜனநாயகம் தழைக்க விவசாயிகள் பிரச்னை, பெகாஸஸ் விவகாரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.