இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, சுனந்தாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, சசி தரூருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு காவல் துறை அனுமதி கோரியிருந்தது. அதற்கு சசி தரூா் தரப்பு வழக்குஞைா் விகாஸ் பஹ்வா எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, சசி தரூருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்று கூறியதை அவா் எடுத்துரைத்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனா பரவல் காரணமாக வழக்கை ஜூலை 27-ஆம் தேதிக்கு வைத்திருந்தாா்.